போதைப்பொருட்கள் வியாபாரிகளாக மாறும் இளைஞர்கள் : ஹிந்து முன்னணி வேதனை

0
1358

தமிழகத்தில் ஆக்டோபஸ் போல போதைப்பொருட்களின் புழக்கம் ஆக்கிரமித்துள்ளது. அரசியல், கல்வி, திரைத்துறை உள்ளிட்டவற்றை ஆட்கொண்டு சமூகத்தை சீரழித்து வருகிறது. கடத்தல் ஆசாமிகள், போதைப்பொருள் கடத்தலில் பெற்ற பணத்தை, திரைத்துறையில் முதலீடு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகளை, ஆளுங்கட்சியினர் ஆதரிக்கும் நிலை மாறி, கட்சியை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தும் நிலை உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த ஜாபர் சாதிக், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை கடத்தியது இதற்கு உதாரணம். சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் பலர், கஞ்சா வியாபாரிகளாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. உளவுத்துறை மற்றும் போலீசாரின் ஆதரவு இல்லாமல் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பே இல்லை. ஹிந்து இயக்கத்தினர் மீது பொய் வழக்குகளை போடுவதோடு, பயங்கரவாதிகள், மதம் மாற்றுபவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., செயல்படுகிறது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here