மும்பையில் 5 ஹிந்துக்களுக்கு கத்திக் குத்து : குற்றவாளியின் வீடு தகர்க்கப் பட்டது.

0
1974

மும்பையில் 5 ஹிந்துக்கள் மீது கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு தனக்குத்தானே காயம் ஏற்ப்படுத்தி கொண்ட இன்குயிலப் கான் கைது. சட்ட விரோதமாக கட்டப்பட்டி ருந்த அவனுடைய 5 மாடிக் கட்டிடம் இடித்துத் தள்ளப் பட்டது. மும்பை சகிநாக பகுதியில் உள்ள கோவிலு க்கு வழிபாடு செய்ய வந்த தங்கராஜ் செட்டியார் (58), லக்ஷ்மி செட்டியார் (53), ராஜேஷ் தங்கராஜ் செட்டியார் (28), விக்கி (30) மற்றும் சித்தேஷ் பிரகாஷ் கோர்படே (23) ஆகியோர் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளாயினர். கத்தியால் குத்திய இன்குயிலப் கான் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுகளும் உண்டு. புகார்கள் பல இருந்தும் வழக்கம் போல் காவல் துறை கண்ணை மூடிக் கொண்டு இருந்து வந்தது. கான் மீது புகார் செய்தவர்களைப் பழி வாங்கிடத் திட்டமிட்டு இவர்கள் மீது 14 ஆம் தேதியென்று தாக்குதல் நடத்தியுள்ளான். சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை யொட்டி கான் சட்ட விரோதமாக 5 மாடிக் கட்டிடம் கட்டியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை. இந்நிலையில் 5 பேரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப் பட்டான். நீண்ட காலமாகவே கானின் செயல்பாடுகள் வகுப்பு மோதலை உருவாக்கும் விதமாகவே இருந்து வந்துள்ளது. காவல் துறை கண்டு கொள்ளவே இல்லை. அந்த அளவிற்கு கானின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது.கத்திக் குத்து சம்பவத்தைக் கேள்வி பட்ட மும்பை புறநகர் பொறுப்பு அமைச்சர் மங்கள ப்ரபாத் லோதா விரைந்து வந்து ப்ரச்சனையை விசாரித்து இன்குயிலிப் கானின் சட்ட விரோதமான 5 அடுக்கு கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். மேலும் அவன் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here