சட்ட விரோதமாக நாட்டிற்குள் ஊடுருவி யுள்ள ரோஹிங்யாக்கள் பாரதத்தில் வசித்திடவோ குடியேறிடவோ அனுமதி கிடையாது. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் எதுவும் கிடையாது. அது பாரத குடிமக்களுக்குரியது. ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் அகதிகள் அடையாள அட்டையையும் நாம் அங்கீகரிக்கவில்லை. ஐ.நா. சபை வழங்கியுள்ள அகதிகள் அட்டை வைத்திருக்கிற சிலர் இங்கு அகதிகள் அந்தஸ்து கோருகின்றனர். நீதிமன்றம் நாடாளுமன்ற அதிகாரத் திற்குள்ளோ அல்லது அரசு எடுக்கும் கொள்கை முடிவிலோ தலையிடக் கூடாது. அரசு நிர்வாகம் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை தனியானதொரு பிரிவாக பிரித்து அகதிகள் அந்தஸ்து வழங்க உள்ளது. ரோஹிங்யாக்கள் பாரத குடிமக்கள் இல்லை. எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Home Breaking News மத்திய அரசின் மாறாத உறுதியான நிலைப்பாடு – ரோஹிங்யாக்கள் பாரதத்தில் குடியேறிட அனுமதி கிடையாது