எழினி 2K24-இல் ராமாயண காவியத்தை கேலிக்குள்ளாக்கியது கண்டணத்துக்கு உரியது . 

0
3548
இந்த அவமானகரமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறையை (Performing Arts Department) ஏபிவிபி பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறை எழினி 2K24  என்ற நிகழ்ச்சியில்  மார்ச் 29, 2024 அன்று “சோமயானம்” என்ற தலைப்பில் ஒரு நாடகம் நடத்தப்பட்டபோது.
பாரததேசத்தின் இருபெரும் காவியங்களில் ஒன்றான ராமாயணத்தை அவமதிக்கும் வகையில் இதில் கதையும் கதா பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டது ஒரு துயரமான சம்பவம் மட்டுமல்ல இது இந்து மதத்தின் நம்பிக்கையை அவமதிப்பதாகவும் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கலை துறையை (Performing Arts Department) வன்மையாக கண்டிக்கின்றோம்
நாடகத்தில் சீதையின் பாத்திரம் “கீதா” என்றும் மேலும் அவர் “ராவணனுடன்” நடனம் ஆடுவது போலவும் “பாவனாவாகவும்” சித்தரிக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கக்கூடியது. அதிர்ச்சியூட்டும் வகையில், சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சியை வழங்குவது போல  இதில் சித்தரிக்கப்பட்டது. சீதாவை கடத்தும் காட்சியில், “எனக்கு திருமணமாகிவிட்டது, ஆனால் நாம் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறுவது போல  காட்டப்பட்டது. ராமாயணம் மற்றும் அதன் பாத்திரங்களின் புனிதத்தன்மையின் இத்தகைய அப்பட்டமான புறக்கணிப்பும் ஒரு மதத்தின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அரங்கேற்றப்பட்டது.
இந்த காவியத்தை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான  மக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் அமைத்தது கண்டிக்கத்தக்கது. ராமாயணத்தை இப்படி தவறாக சித்தரிக்கும் இந்த தீய செயல் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி அமைப்புகள் தலைமையியில்  நன்கு திட்டமிடப்பட்ட செயலாகும் செயல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேற்றப்படுகிறது.
இந்த நாடகத்தில் ராமாயண காவியத்தில் வரும் உடைகள் போல அணிந்து அதில் உள்ள பாத்திரத்தை அவனப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புகள் வேண்டுமென்றே ராமரை இழிவுபடுத்தவும், அம்மையார் சீதையின் புனிதத்தை கேள்விக்குட்படுத்தவும் அவர்கள் இதை பயன்படுத்தியுள்ளனர். மேலும், மற்றொரு குழப்பமான காட்சியில், ஹனுமான் ஜியை, “காஞ்சநேயனாக” சித்தரித்தனர். மேலும் அவரது வால் இறைவனுடன் தொடர்புகொள்ளும் சாதனமாக பயன் பட்டதாக கேலிக்குள்ளாகினர்.
இப்படி ஒரு மதத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்தி  கேலிக்குளாக்குவதன் மூலம் வகுப்புவாத ஒற்றடுமையை சீர்குலைக்கும் வகையிலும் ஒற்றுமையை சீர் குலைக்க தூண்டும் வகையிலும் இந்த தீய சமூக விரோத சக்திகள் முயல்கின்றனர்.  இப்படி ஒரு மதத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்தி கேளிக்குள்ளாக்குவது மூலம், பெரும்பான்மையினரின் மத நம்பிக்கையை கொச்சை படுத்துவதாக அமைந்தது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
ABVP கருத்து சுதந்திரத்தின் கொள்கையில் உறுதியாக நம்புகிறது ஆனால் இந்த சுதந்திரத்தை மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மரியாதையுடன்,
பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று திடமாக பின்பற்றுகிறது.
ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு

 

 ஊக்குவிக்கப்பட்டாலும், அது ஒருபோதும் மத நம்பிக்கைகள் புண்படுத்தும் போலவும் இருக்கக்கூடாது,  மத உணர்வுகள் அல்லது வகுப்புவாத முரண்பாட்டை வளர்ப்பது அறவே இருக்ககூடாது என்று வலியுறுத்துகிறது. இந்த கண்டிக்கத்தக்க சம்பவத்தின் மீது பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஏபிவிபி பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் கோருகிறது
1. நாடகத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான புஷ்பராஜ் (எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு) உடனடியாக நீக்கம் செய்யப்படவேண்டும். இதில் நடித்த சம்பந்தப்பட்ட நடிகர்கள், அதாவது மிதுன் கிருஷ்ணா, ஸ்ரீபார்வதி, ஆதித்யா பேபி மற்றும் விஷக் பாசி மீது எடுக்கப்படும் நடவடிக்கை எதிர்காலத்தில் மத நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கும் எந்த ஒரு செயலுக்கும் இது ஒரு பாடமாக அமையவேண்டும்.
2. துறைத் தலைவர் டாக்டர் ஷர்வணன் வேலு மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். நிகழ்ச்சியின் கலை மற்றும் பிற ஆசிரியர்கள் (வேறு சம்பந்தப்பட்டவர்கள்), மேற்பார்வை மற்றும் இந்த நாடகத்தை உருவாக்க அனுமதித்தது சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் புனிதத்தன்மையை பாதுகாப்பதில் ABVP திடமாக நம்புகிறது . எனவே புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமாயணம் சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் பன்முகத்தன்மையை பறைசாற்றும். தலைசிறந்த இலக்கியங்களை அவமதித்ததற்காக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் கலை துறையை (Performing Arts Department) வன்மையாக கண்டிக்கின்றோம். நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக, இந்தியாவின் கலாச்சாரத்தை பாதுகாக்க,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் உறுதிப்பாட்டுடன்  மீட்டு எடுக்க வேண்டும் என்று ABVP கோருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here