தெற்கு 24 பரகானாஸ் மாவட்டம் சரீஷாவின் கலகச்சியா பகுதியில், மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அவர்கள் ஸ்ரீராமரின் பாடல்களை பாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அவர்களை தாக்கியதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிலை கரைப்பின் போது ஸ்ரீராமரின் பாடல்களை இசைத்ததற்காக அதன் காரியகர்த்தாக்கள் மற்றும் பூத் தலைவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) அரசியல் பயங்கரவாதம் என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் காவல்துறையின் உடனடித தலையீடு பதற்றத்தை தணித்ததாகவும், இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாஜகவினர் 12 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.