கர்நாடக அமைச்சர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய ஏபிவிபி !

0
248

கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், நிரஞ்சன் ஹைமாத். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹைமாத். அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். இதே கல்லூரியில் பெலகாவியைச் சேர்ந்த ஃபயாஸ் என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில், ஃபயாஸ், நேஹாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை பலமுறை நேஹாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஃபயாஸின் காதலை, நேஹா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் நேஹாவை ஃபயாஸ் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். மேலும் அவரை, நேஹா கண்டித்துள்ளார்.

இதனால் நேஹா மீது ஆத்திரத்தில் இருந்த ஃபயாஸ், நேற்று (ஏப்ரல் 18) தேர்வு எழுதிவிட்டு மதியம் வெளிவந்த நேஹாவை, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த நேஹா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து நேஹாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் கல்லூரியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தப்பியோடிய ஃபயாஸையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து ஏபிவிபி தொண்டர்கள் பெங்களூரூவில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here