அயோத்தி: ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஸ்ரீ குழந்தை ராமரை தரிசிக்க மூன்றே மாதங்களில் ஒன்றரை கோடிக்கு மேலானூர் இதுவரை வந்துள்ளனர் . இது குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: ஜனவரி 22ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் வருகை இதுதான். தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர் என்றார். தற்போது கோவிலின் கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதல் தளம் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவிலை சுற்றி 14 அடி அகலத்தில் பார்கோட்டா எனப்படும் பாதுகாப்பு சுவர் கட்டப்படும். பார்க்கோடாவில் ஆறு சிறிய
கோவில்களும் இருக்கும். ஹனுமான், அன்னபூரணி, வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் அகஸ்தியரின் கோவில்களும் இங்கு இருக்கும். சிவன் மற்றும் சூரியனுக்கும் கோவில்கள் இருக்கும். ஒரே நேரத்தில் 25,000 யாத்ரீகர்கள் தங்கக்கூடிய முற்றம் இக்கோயிலில் உள்ளது. குகன், சபரிமாதா, தேவி அஹல்யா மற்றும் ஜடாயு கோவில்களும் முடியும் தருவாயில் உள்ளது என்கிறார் சம்பத் ராய்.