மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சென்னை ராயப்பேட்டை கோயில் ராஜகோபுரத்தை எதற்காக இடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, சென்னை ராயப்பேட்டையில் நுாற்றாண்டுகள் பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலின் 5 அடுக்கு ராஜ கோபுரத்தை இடிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
எந்தத் திட்டமாக இருந்தாலும் இந்துக் கோயில்களை குறி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.