கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கார்கில் வெற்றி தினத்தில், பாரத தாயின் மரியாதையைக் காக்க உச்சபட்ச தியாகங்களைச் செய்த வீர மகன்கள் மற்றும் மகள்களை நாங்கள் பெருமையுடன் வணங்குகிறோம்.
நமது எல்லைக்குள் ரகசியமாக பதுங்கியிருந்த எதிரி ராணுவத்தை நமது தீரம் மிக்க வீரர்கள் விரட்டியடித்த, பாகிஸ்தானுக்கு எதிரான நமது பெருமைக்குரிய வெற்றியை குறிக்கும் தேசிய கொண்டாட்டம் இதுவாகும்.
வீர மங்கையர் மற்றும் நமது தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களின் மீள்திறன் நமது தேசத்தின் நீடித்த உணர்வை எதிரொலிப்பதால் அவர்களுக்கும் இந்நாளில் வணக்கம் செலுத்துகிறோம். ஜெய் ஹிந்த்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.