போராட்டம் என்னும் பெயரில் ஹிந்துக்களை கொல்லும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

0
68

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் வங்கதேசத்தில் வன்முறை உச்சத்திற்கு சென்றுள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இந்து சமூகத்தினருக்கு எதிரான வன்முறையாக மாறியுள்ளது. ஏராளமான இந்துக் கோவில்கள், வீடுகள் மற்றும் இந்து சமூகத்திற்கு சொந்தமான இடங்கள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இதுவரை எண்ணற்ற இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் இந்துக்கள் மீதான வெறுப்புக்கான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள் என்ற போர்வையில் வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகள், கடைகள் மற்றும் கோவில்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிரதமர் பதவியில் இருந்து ஹசீனா ராஜினாமா செய்த போதிலும், போராட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன, இந்துக்கள் மீதான தாக்குதலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வங்கதேசத்தின் ஃபெனியில் உள்ள துர்கா கோவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டது. தினாஜ்பூரில், ஃபுல்தாலா தகன மைதானம் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது. பர்பதிபூரில் உள்ள காளி மந்திர் உட்பட 5 கோவில்கள் அழிக்கப்பட்டன. சிரிர்பந்தர் தானா பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் வீடுகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

லக்ஷ்மிபூரில் ஹிந்து குழுவின் தலைவர் மற்றும் தொழிலதிபரான தீபக் சாஹாவின் வீடு மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. கோஷோர்கஞ்சின் குளியார்ச்சர் கிராமத்தில் உள்ள நகுல் குமார் மற்றும் சுஹ்சாந்தா ஆகியோரின் வீடுகள் எரிக்கப்பட்டன. ரௌசானில் உள்ள உஜ்ஜல் சக்ரவர்த்தியின் வீடு தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதுபோல் பல ஹிந்துக்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, பிரதமரின் இல்லத்தில் நுழைந்து, அவரது அறைகளுக்குள் நுழைந்து, அவரது அலமாரிகளைக் கொள்ளையடித்து, அதில் உள்ள உள்ளாடைகளைப் திருடி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமியின் 2200 உறுப்பினர்களுக்கு டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியுள்ளது. இட ஒதுக்கீட்டு மையமாக வைத்து நாடு முழுவதும் சமீபகாலமாக கொந்தளிப்பு ஏற்பட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பங்களாதேஷில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நாட்டில் உள்ள சிறுபான்மை இந்துக்களைக் கொன்று சித்திரவதை செய்து அவர்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி பிரபலமாக உள்ள ஹிந்து கடைகளில் ஆடைகள் பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here