சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு!

0
38

புதுடில்லி: தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவை பாராட்டும் விதமாக இத்திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here