தங்கப் பதக்கத்தை தவறவிட்டாலும் பரவாயில்லை : எங்களுக்கு நீயே ஒரு தங்கம் தான் : வீறுகொண்டு தாயகம் திரும்பு !

0
86

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

50 கிலோ மகளிர் மல்யுத்தப் பிரிவின் இறுதிப் போட்டி வரை வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்பு 50 கிலோவுக்கு மேல் 100 கிராம் வரை எடை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மல்யுத்த போட்டி விதிகளின் படி ஒருவர் எந்த எடைப் பிரிவில் பங்கேற்கிறாரோ அந்த எடையை போட்டிகள் முடியும் வரை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்.

சில கிராம் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்து இருந்தால் கூட அவருக்கு வெள்ளிப் பதக்கமோ அல்லது வெண்கல பதக்கமோ கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் எந்த பதக்கமும் கிடைக்காது என கூறப்படுகிறது. இது இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவுக்கு பேரிடியாக இறங்கி உள்ளது.

பல கனவுகளோடு பல வலிகளோடு போராடி போராடி இறுதிசுற்று வரை முன்னேறி தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன் ! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். உங்களின் இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் இப்போது அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை. அதே சமயம், நீங்கள் மீண்டு வருவதற்கான உருவகம் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here