பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணி, வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணியுடன், ஸ்பெயின் அணி மோதியது. ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் வென்றது. ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 2 கோல் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.