கல்வி என்பது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி! – குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு

0
61
கல்வி என்பது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி என்று குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் திரெளபதி முா்மு தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நியூசிலாந்து சென்றடைந்தார்.

அப்போது முர்முவுக்கு நியூசிலாந்தின் ராயல் காா்டு ஆப் ஹானா் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நியூசிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சனை குடியரசுத்தலைவர் சந்தித்தாா். இதனிடையே, வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து சா்வதேச கல்வி மாநாட்டில் முா்மு கலந்துகொண்டு உரையாற்றினாா்.

அப்போது, கல்வி என்பது ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்துக்கானது மட்டுமல்ல என்றும், அது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகும் எனவும் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் உள்ள சா்வதேச மாணவா்களில், இரண்டாவது அதிக எண்ணிக்கையில் எட்டாயிரம் இந்திய மாணவா்கள் தரமான கல்வியைப் பெற்று வருவதாகவும் குடியரசுத்தலைவர் திரெளபதி முா்மு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here