சுதந்திர தினத்திற்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பா ?

0
31

நாளை வியாழக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ரசமுத்திரபாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட ,மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று இருப்பதால் உடைந்து சேதமடைந்திருந்த கொடி கம்பத்தை சரி செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆசிரியர்கள் வந்து பார்த்தபோது சீர் செய்யப்பட்ட கொடிக்கம்பம் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுதந்திர தினத்திற்கு கொடியேற்ற கூடாது என்று சமூக விரோதிகள் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை உடைத்தெறிந்ததை குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டம்பேட்டில் இருந்து தேவம்பட்டு வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே தேசபக்தியை ஏற்படுத்த இருசக்கர வாகனத்தில் பேரணி செல்ல பாஜகவை சேர்ந்த இளைஞர் அணி தலைவர் நரேஷ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு காவல் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு காவல் துறையினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று பேரணிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் எக்ஸ் பதிவில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஊர்வலம் நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறிய காவல் ஆய்வாளர் பற்றி என்ன சொல்வது? இதுதான் தமிழகம் தாழ்ந்ததா? நாங்கள் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிறோம். அப்படி இருக்குபோது தேசியக் கொடியை அணிவகுத்துச் செல்ல அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here