வி.எச்.பி தலைவர் டெல்லியில் இஸ்கான் தலைவரை சந்தித்து, வங்கதேசத்தில் இஸ்கான் கோயில்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அனுதாபத்தை வெளிப்படுத்தினார்.

0
60
புது தில்லி, ஆகஸ்ட் 13, 2024 – வி.எச்.பியின் தலைவர், மூத்த வழக்கறிஞர் திரு. அலோக் குமார் இன்று இஸ்கான் தலைவர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ மோகன்ரூப் தாஸ் பிரபு அவர்களை வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இந்து சமுதாயத்தின் கவலை, அனுதாபம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தம் விதமாக சந்தித்தார். தெற்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற கூட்டத்தில், வங்கதேசத்தில் கோயில்கள் மற்றும் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்கள் குறித்து வி.எச்.பியின் தலைவர் தனது ஆழ்ந்த ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும், இஸ்கான் மற்றும் அதன் பக்தர்கள் ஜிஹாதிகளால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல என்றும் இதற்கு முன்பு 2021லும், இந்த தொண்டு நிறுவனம் தாக்கப்பட்டது, இஸ்கானின் அனைத்து பக்தர்கள் மற்றும் பிரம்மச்சாரிகளின், தர்மத்தின் மீதான பக்தி மற்றும் அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என்றார்.
பாதிக்கப்பட்ட இந்து மடங்கள், கோவில்ககள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வங்கதேச அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) கோரிக்கை விடுத்துள்ளது. மற்றும் தீவிரவாதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
இந்நிலையில், இதுபோன்ற ஜிகாதி துன்புறுத்தல்கள் மற்றும் செயல்பாடுகள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசுக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வி.எச்.பி வேண்டுகோள் விடுத்துள்ளது. வி.எச்பி.யின் சர்வதேசத் தலைவர் இஸ்கானிடம், இந்த நெருக்கடியான நேரத்தில், விஎச்பியுடன் சேர்ந்து, முழு இந்து சமுதாயமும் தங்களுடன் முழு மனதுடன் நிற்கிறது என்றும், தேவைப்படும் இடங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
இஸ்கான் தலைவருடன் அவர்களின் ஊடக இயக்குநர் ஸ்ரீ. வி.என் தாஸ் பிரபு மற்றும் ஸ்ரீ. ரிஷி குமார் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்ரீ அலோக் குமாருடன், வி.ஹெச்.பி தேசிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ வினோத் பன்சால், ப்ராந்த் தர்மாச்சார்யா சம்பர்க் பிரமுக் ஸ்ரீ தீபக் குப்தா, சாஹ்-பிரமுக் ஸ்ரீ லக்ஷ்மண் சிங், வி.எச்.பி தெற்கு டெல்லி தலைவர் ஸ்ரீ தீபக் கண்ணா, செயலாளர் ஸ்ரீ ராதாகிருஷ்ணா, பஜ்ரங் தள் இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ அமித் பெசோயா மற்றும் லஜ்பத் நகர் மாவட்ட தலைவர் ஸ்ரீ கரண் கபூர் கலந்து கொண்டார்கள்
வெளியிட்டவர்:
வினோத் பன்சால்
தேசிய செய்தி தொடர்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here