மாவீரன் வீரகணேஷ்

0
3288

தமிழகத்தின் இந்து இயக்க முதல் பலிதானி.வீரத்திற்கும் மதபற்றுக்கும் ஆணிவேராய் திகழ்ந்தவர். 15-5-1965 ஆம் ஆண்டு மணி சரஸ்வதி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.வீரகணேஷ் உடன் பிறந்தவர்கள் அக்கா மற்றும் ஒரு தம்பி. கோவை கெம்பட்டிகாலணி பகுதியில் குடியிருந்து வந்த வீரகணேஷ் யூனியன் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். 1983 ஆம் ஆண்டு ஆர்.எஸ் எஸ் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டார்.

சங்கபக்தி….
சங்கத்தில் RSS ல் இணைந்த சிறிது காலத்திலேயே அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். தைரியமான பேச்சு, ஆளுமைத் திறன்,அதிக நேரம் கொடுத்தல், அதீத சுறு சுறுப்பு வீரகணேசை அதிகமாய் அடையாளம் காட்டியது.
கெம்பட்டிகாலணி ஷாகா …
ஆர்.எஸ்.எஸ்ஸில் இரண்டாமாண்டு பயிற்சி எடுத்து கொண்ட வீரகணேஷ் தான் பிறந்ந கெம்பட்டி காலணி ஷாகாவில் 1986ல் ஆர்.எஸ் எஸ் பெரிதாக அறியப்படாத காலத்திலேயே 30 பேர் வரை பங்கேற்க செய்தார். அதன் முக்கிய சிக்ஷக்காக பணியாற்றினார்.

 

சங்க இசைவாத்திய கருவிகளை இசைப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார். பொள்ளாச்சி பகுதியில் சில மாதங்கள் முழுநேர ஊழியராக பணியாற்றினார்.

இந்துமுன்னணி பணி
சங்கத்திலிருந்து வந்து இந்துமுன்னணியில் தன்னை இணைத்து கொண்ட அவர் மேற்கு மாநகர அமைப்பாளராக. பொறுப்பேற்று தொடர் சுற்றுபிரயாணம் மூலம் நிறைய சகோதரர்களை இணைத்தார். காவல்துறை அதிகாரிகளிடம் அவர் பேசும் தைரியமான பேச்சு பலரை கவர்ந்தது.

உக்கடம் ஷாகா
கோட்டைமேடு பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி.அந்த பகுதியில் K.l ரவி என்ற ஸ்வயம் சேவக் மளிகைகடை நடத்தி வந்தார் .அவரை சந்திக்க அடிக்கடி கோட்டைமேடு சென்ற வீரகணேஷ் கோட்டைமேட்டிற்கு எதிரில் உள்ள ராமர் கோவில் வீதியில் அவர் ஷாகாவை துவக்கியது முஸ்லீம்களை ஆத்திரமூட்டிய்து.

சுவர்வாசக வல்லவர்
படங்கள் வரைவதில் அபார திறமை கொண்ட வீரகணேஷ் அந்த திறமையை இய்க்க வளர்ச்சிக்கு பயன்படுத்தினார். கோவையில் பலபகுதிகளில் இந்துக்களை இணைக்க இந்து முன்னணி என்று சுவர்வாசகங்களை சைக்கிளில் சென்று இரவு நேரங்களில் வரைவார். 1989 ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில் தாமரை சின்னத்தை வரைந்து இந்து ஓட்டு வங்கியை உருவாக்கினார். சுவர் வாசகத்தை வரைந்து அதற்கு கீழே வீரகணேஷ் கெம்பட்டி காலணி என எழுதிவிட்டு வருவார்.

நாத்திக முஸ்லீம் ஹக்கீம் கொலை வழக்கு
1988 ல் ஹக்கிம் என்ற முஸ்லீம் நடத்திய கடவுள் மறுப்பு கூட்டத்தில் இந்து தெய்ங்கள் இழிவுபடுத்தப்பட்டது இந்துக்களை யோசிக்க வைத்தது. அன்று நடந்த ஹக்கீம் கொலையில் வீரகணேஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 90 நாட்கள் சிறையில் இருந்தார். கோவையில் இந்து எழுச்சிக்காக தொடர்ந்து உழைத்த வீரகணேஷ் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆகஸ்ட் 18 ம்தேதி முஸ்லீம் பயங்கரவாதிகளால் அவர் காட்டூரில் பேரிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வரும் போது கொடூரமாக வெட்டப்பட்டார். உடம்பில் 28 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் 13 நாட்கள் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உயிரிழந்தார்.

அயோத்தி கனவும் வீரகணேசும்
1989 அயோத்தி கரசேவை பணி நாடு முழுதும் நடந்து கொண்டிருந்தது. அயோத்தி ராமர் கோவில் வீரகணேசின் லட்சியம். உயிருக்கு போராடிய நிலையிலும் !என்னை விடுங்கள் நான் அயோத்தி செல்ல வேண்டும் என்று புலம்பினார். உடல் பொருள் ஆவியை இந்து சமுதாயத்திற்காக அர்ப்பணித்த வீரகணேசின் கனவு இன்று அயோத்தி ராமர் கோவில் மூலம் நனவாகியுள்ளது. அவர் போல அன்னை மதம் காக்க நாமும் பணி செய்வோம் அவர் ஆத்மா நம்மை லட்சிய வீரராக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here