70 வயதை கடந்த அனைவருக்கும் மருத்துவ காப்பீடு!

0
1547
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீடு திட்டம் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காப்பீடு திட்டம் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு மட்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசின் இந்த ஒப்புதல் மூலம் ஏற்கனவே பயன்பெறுபவர்களுடன் சேர்ந்து நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மூத்த குடிமக்களும் காப்பீட்டில் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும் எனவும் தனியார் காப்பீடு திட்டங்கள், மாநில காப்பீடு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here