ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

0
146

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் பத்மபூஷன்  டாக்டர் கே ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் பாக்வத்  சிறப்புரையாற்றுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ஆறு முக்கிய பண்டிகைகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறது, இவை அனைத்துமே சனாதன தர்மத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

ஸ்வயம்சேவகர்களுக்கு அனைத்து பண்டிகைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், விஜயதசமி விழாவிற்குஒரு சிறப்பிடம் உள்ளது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு விஜயதசமி அன்று தான் (27 செப்டம்பர் 1925) நிறுவப்பட்டது.

100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற  ஆர்எஸ்எஸ் அகில பாரத ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சங்கத்தின் நூற்றாண்டில், கவனம் கொடுக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இவற்றை வெகுஜன இயக்கமாக எடுத்து செல்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பஞ்ச பரிவர்த்தன் எனப்படும் ஐந்து முக்கிய முன்னெடுப்புகள், தொடர்ந்து நடைபெறும். இவற்றில் சங்கத்தின் சகோதர அமைப்புகளும் பங்கேற்கும்.

5 முக்கிய முன்னெடுப்புகள்

1. சமூக நல்லிணக்கம் : சமூக முன்முயற்சிகளில் பல்வேறு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்.

2. குடும்ப விழிப்புணர்வு : குடும்பங்களை குறிப்பாக, நவீன காலத்தில் நகர்புறத்தில் வசிக்கும்  குடும்பங்களை  வலுப்படுத்தி அதன் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுதல்

3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு: சமுதாயத்தின் பங்களிப்புடன் சுற்றுச்சூழலுடன் ஒத்த வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதுன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்

4. சுதேசி (ஸ்வா): நமது வாழ்க்கை முறை, மொழி, பழக்க வழக்கங்கள் அனைத்தும் சுயத்தன்மையை  பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்தல்…….

5. குடிமக்கள் கடமைகள்: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்து விட்ட  நாம், நமது உரிமைகளை மட்டுமல்ல, நமது குடிமைக் கடமைகளையும் நிறைவேற்றுவது அவசியம்.  சமூகத்தில் உள்ள பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் இது மேற்கொள்ளப்படும்

இந்த ஐந்து முயற்சிகளும் சங்கத்தின் நூற்றாண்டில் வெகுஜன இயக்கமாக மேற்கொள்ளப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here