வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (VKA)
தேசிய அளவிலான கார்யகர்த்தர்கள் மாநாடு ஹரியானா சமால்காவில் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டினை குஜராத் மாநிலத்தின் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ரமேஷ் பாய் ஓஜா தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளர் ராம்தத் சக்ரதர் மற்றும் வனவாசி கல்யாண் ஆஸ்ரம் தலைவர் சத்யேந்திர சிங், பொதுச் செயலாளர் யோகேஷ் பாபட், அமைப்புச் செயலாளர் அதுல் ஜோக் உட்பட பலர் பங்கேற்றனர்.
அந்தமான் & நிக்கோபார், லடாக், ஜம்மு & காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் வனவாசி மக்கள் & கார்யகர்த்தர்கள் 3 நாள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
நாடெங்கிலும் 17,394 இடங்களில் வனவாசி மக்களுக்கான நலத்திட்டங்கள் 22,152 செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வனவாசி மக்களிடையே செயல்பட்டு வருகிற மிகப் பெரிய தேசிய அமைப்பு வனவாசி கல்யாண் ஆஸ்ரம்.