கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பலரும் வீடுகளை இழந்தனர். மழையால் வீடுகளை இழந்தோருக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டன.
அதன் ஒருபகுதியாக ஏ.பி.நாடானூர் பகுதியில் கட்டப்பட்ட வீட்டினை ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு, குத்து விளக்கேற்றி பயன்பாட்டிற்காக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டா இல்லாத மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க முன்வர வேண்டும் என்றும், ஏராளமான கிராமங்களில் பட்டா இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார். வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.