சமூகத்தில் ஏற்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல் சூழலில் தற்காத்துக் கொள்வதற்காக தற்காப்பு பயிற்சியானது நாடு முழுவதும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கட்டமாக திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பாரதியாரின் நினைவு தினத்தில் துவங்கிய பாரதியின் அக்கினி சிறகுகள் என்ற பெயரில் தற்காப்பு பயிற்சி அப்துல்கலாமின் பிறந்த நாளின் முடிவுற்றது. இந்நிகழ்ச்சியை நேருவேந்திரா உடனும் ராணி அண்ணா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் NSS உடனும் இணைந்து நடத்தப்பட்டது. இப்ப பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட ABVPமாநில இணைச் செயலாளர் சூர்யா கலந்து கொண்டார். இதில் பாரதி கண்ட சுதந்திர நாட்டினை நம் முன்னோர்கள் நிறைவேற்றினர் , நாமோ அப்துல் கலாம் கண்ட வல்லரசு இந்தியாவை உருவாக்கும் கடமையை பெற்றுள்ளோம். பாரத தேசம் வல்லரசாக வேண்டுமெனில் நாம் அனைவரும் தேசத்தை பற்றி சிந்திக்க வேண்டும் தேச வளர்ச்சிக்கான முயற்சிகளில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தேசிய கலை மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வி. மகாலெட்சுமி, கல்லுரியின் பேராசிரியர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.