நைஜரை விட்டு வெளியேறுங்கள் : இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

0
128

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், கடந்த மாதம் 26ல் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அந்நாட்டு அதிபர் முகமது பேஸோமை பதவியில் இருந்து நீக்கிய ராணுவ ஜெனரல் அப்தோரஹ்மான் சியானி, தன்னை அந்நாட்டு தலைவராக பிரகடனம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து நைஜர் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்நாட்டில், தற்போதைய நிலைமைப்படி 250 இந்தியர்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள், உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க அறிவுறுத்தப்படுகின்றனர். நியாமே நகரில் உள்ள இந்திய துாதரகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here