அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்வதுடன், மாணவர்களிடையே தலைமைப்பண்பை வளர்க்கவும், பாரத பண்பாட்டை உலகுக்கு எடுத்துரைக்கவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டின் தொடக்க விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த பத்மஶ்ரீ. ஶ்ரீதர் வேம்பு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “நமது நாட்டில் இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் தேவை. ஆனால், அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமில்லாது. அதற்கு பதிலாக, வேலைவாய்ப்பிற்கான சூழலை உருவாக்க வேண்டும். இதற்காக, நாட்டில் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
சுயநம்பிக்கை, சுய உந்துதல், சுய ஒழுக்கம் ஆகிய மூன்று முக்கிய குணங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் உறுதி செய்யப்பட வேண்டும். ABVP மாணவர்களுக்கு இவை இயற்கையாகவே உள்ளது. இவற்றை துணையாகக் கொண்டு பாரதிய வழியில் நாட்டை முன்னேற்றுவது நம் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.