பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் சேவா பாரதி அமைப்பு மற்றும் சக்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு இணைந்து 150 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், ஆடைகள் மற்றும் போர்வைகள் அடங்கிய 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை வழங்கப்பட்டன.