மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ABVP தென் தமிழக மாநில இணைச்செயலாளர் திரு. சந்தோஷ்குமார் அவர்கள் “பாரதம் போற்றும் பாரதி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களிடையே பாரதியார் குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டு, ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக, பள்ளியின் இயக்குனர் திரு. திருமுருகன் அவர்கள் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மாணவர்களுக்கு பாரதியாரின் தேசியத்தோடு ஒற்றுமையையும் மொழிகளின் பெருமையையும் உணர்த்தும் கருத்துகள் பகிரப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே தேசப்பற்று மற்றும் மொழிப் பெருமை குறித்து உந்துதலாக அமைந்தது.