ஸ்வதேசி ஜாகரண் மஞ்சின் (SJM) தேசிய அளவிலான முக்கிய பொறுப்பாளர் கூட்டம் தென்காசி அருகிலுள்ள ZOHO நிறுவனத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற்றது.
இந்த 2 நாள் சிந்தனை கூட்டத்தில், அமைப்பின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் காஷ்மீரி லால், இணை அமைப்பாளர் சதீஷ் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். சுந்தரம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர் மற்றும் காரியகர்த்தர்கள் பங்கேற்றனர்.
ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு உரையாற்றினார்
கூட்டத்தின் சில அமர்வுகளில் ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு, கிராமப்புற முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கிக் கூறினார்.
முக்கிய அம்சங்கள் விவாதம்
கூட்டத்தில், ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய 10 முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
இந்த சிந்தனை கூட்டம் தேசிய மட்டத்தில் ஸ்வதேசி ஜாகரண் மஞ்சின் எதிர்கால திட்டங்களை வடிவமைக்க முக்கியமான கட்டமாக அமைந்தது.