ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 100 ஆண்டுகள் பழமையான செயின்ட் லூக்கா தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள செயின்ட் லூக்கா தேவாலயம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) மனோஜ் சின்ஹா புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தை திறந்து வைத்தார், இது நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பொதுமக்கள் பிரார்த்தனை செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய மனோஜ் சின்ஹா, “ஸ்ரீநகரில் உள்ள பழமையான தேவாலயத்தின் இழந்த மகிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு சிறப்பு பிரார்த்தனை நடை பெறுகிறது.