கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடும் பணி துவங்கியது. திங்களன்று 10.5 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 7,32, 146 பேர் சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்கள் மற்றும் 3, 14, 301 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸிலிருந்து 9 மாதங்கள் முடிந்தவர்கள் மட்டுமே மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்ள முடியும்.
முன்னெச்சரிக்கை டோஸாக ஹோமோலோகஸ் தடுப்பூசிகள் மட்டுமே போடப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது, அதாவது முன்னதாக கோவிஷீல்ட் எடுத்துக் கொண்டவர்களுக்கு அதே தடுப்பூசியும், இதற்கு முன்பு 2 டோஸ் கோவாக்சின் பெற்றவர்களுக்கும் பூஸ்டர் டோஸாக கோவாக்ஸின் மட்டுமே வழங்கப்படும்.