கர்நாடகா :கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

0
202

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சட்டம் மற்றும் சட்டமன்ற விவகார அமைச்சர் ஜே.சி. மதுசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும், குறிப்பாக தொற்று குறைவாக உள்ள இடங்களில், கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது அலல்து தளர்த்துவது குறித்து சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் மதிப்பாய்வு செய்த பின்னர் முடிவெடுக்கப்படும் என மதுஸ்வாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here