கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதர நாடுகளில் அதன் பரவல் வேகமெடுத்தபோதும், இங்கு குறைவான மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
நேற்று மட்டும், 1,938 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், 1,807 பேர் உள்நாட்டிலேயே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 131 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், சீன தேசிய சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. இதில், 1,412 பேர், ஜிலின் மாகாணத்தை சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.