அசாம், மேகாலயா எல்லை விவகார தீர்வுக்கான வரலாற்று ஒப்பந்தம் உறுதியானது

0
192

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இருந்து கடந்த 1972ம் ஆண்டு மேகாலயா பிரிக்கப்பட்டது. எனினும் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை விவகாரம் நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இரு மாநில எல்லை விவகாரத்தில் தீர்வு ஏற்படுவதற்கான வரைவு தீர்மானம் ஒன்றை இரு முதல்-மந்திரிகளும் கடந்த ஜனவரி 31ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன்மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது.2 மாதங்களுக்கு பின்பு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் கே. சங்மா ஆகியோர், இரு மாநில தலைமை செயலாளர்கள், பிற உயரதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்ச உயரதிகாரிகள் ஆகியோரது முன்னிலையில் இன்று கையெழுத்திட்டனர்.இதற்கான பரிந்துரையில், விவகாரத்தில் உள்ள 36.79 சதுர கி.மீ. நிலப்பகுதியில், அசாமிற்கு 18.51 சதுர கி.மீ. நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கி.மீ. நிலப்பகுதியும் பிரித்து எடுத்து கொள்ளப்படும். இதனால், 50 ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரத்தில் இந்த வரலாற்று ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here