காஷ்மீரில் போலீசார் அதிரடி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0
553

காஷ்மீரில் போலீசார் அதிரடி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகரில், போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிஷம்பர் நகர் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் போலீசார், அப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here