மத்தியில் 55 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரசால் செயல்படுத்த முடியாத பல திட்டங்களையும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது’ என, அக்கட்சி பெருமிதத்துடன் கூறியுள்ளது.
பா.ஜ., தன் 22ம் ஆண்டுbi விழாவை 6ம் தேதி கொண்டாடியது. இதையொட்டி ௨௦ம் தேதி வரையிலான இரண்டு வார காலத்தை, சமூக நீதியை உறுதி செய்யும் நாட்களாக அனுசரிக்க, பா.ஜ.,வினருக்கு கட்சியின் தேசிய தலைவர் நட்டா உத்தரவிட்டார்.’சமூக நீதியை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்’ என, பிரதமர் மோடியும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டார்.
பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி, பா.ஜ., செய்தி தொடர் பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறியதாவது:மத்தியில், ௫௫ ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸ், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்திய திட்டங்களை விட, கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது
விவசாயம் அல்லாத சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் ‘முத்ரா’ திட்டத்தின், 10 கோடிக்கும் அதிகமான பயனாளியரில், ௫௦ சதவீதத்துக்கும் அதிகமானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இது, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திஉள்ளதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்துள்ளது.