அனுமன் ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0
260

அனுமன் ஜெயந்தியையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.’வலிமை, தைரியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடையாளமான பகவான் அனுமன் பிறந்தநாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனுமனின் அருளால் அனைவரின் வாழ்வும் வலிமை, புத்திசாலித்தனம், அறிவால் நிறையட்டும்’ என்று கூறியுள்ளார். மேலும், குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தான் திறந்துவைக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here