காஷ்மீர் தனியாக இல்லை : இந்திய ராணுவம்

0
198

ஜம்மு – காஷ்மீரில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாத செயல்பாடுகள், கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில், பயங்கரவாதத்தால், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகள், வேதனைகள் மற்றும் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ, பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான ‘வீடியோ’வை பாதுகாப்பு படையினர் வெளியிட்டு உள்ளனர்.பயங்கரவாதத்தால் மக்கள் அடைந்த துயரங்கள் பற்றியும், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கான வீரர்களின் நடவடிக்கை குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது.பல ஆண்டு காலம் நீடித்த பயங்கரவாதம் அனாதைகள், விதவைகள், கதறும் தாய் மற்றும் ஆதவற்ற தந்தைகளை விட்டுச் சென்றுள்ளதை வீடியோ பதிவு செய்துள்ளது.காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதிகள் தவறாக வழிநடத்துவது, சமூகத்தினர் இடையே பிரச்னைகளை உருவாக்குவது உள்ளிட்டவையும் விரிவாக கூறப்பட்டு உள்ளன.இறுதியாக ஒற்றுமை, ஆதரவு, மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்த செய்தியுடன், ‘காஷ்மீர் தனியாக இல்லை’ என வீடியோ கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here