டில்லி ஜஹாங்கிர்புரியில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, இஸ்லாமிய பயங்கரவாதிகள் கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பெரும் கலவரம் உருவானது. எட்டு போலீசார் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 20 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் உள்பட 14 பேர் கைதாகி உள்ளனர். வன்முறை நடந்த பகுதிகளில் இருந்து வாள், கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தனாவை தொடர்பு கொண்டு பேசினார். கலவரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த தவறும் நடக்கக்கூடாது. விசாரணை அறிக்கையை உடனே சமர்பிக்க வேண்டும் என்றார்