தொடரும் லவ் ஜிஹாத்

0
1697

ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள அம்ப் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 15 வயது ஹிந்து சிறுமி கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்தார். இவ்வழக்கை காவல்துறை விசாரித்ததில், சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததை பயன்படுத்தி அவர்கள் வீட்டிற்கு செய்தித் தாள்களை போடும் முகமது ஆரிப் என்ற நபர், அந்த சிறுமியை பலவந்தம் செய்ய முயன்றார். அந்த பெண் எதிர்த்துப் போராடியதையடுத்து செய்தித்தாள் கட்டுகளைத் திறக்கப் பயன்படுத்தும் கட்டரைக் கொண்டு சிறுமியின் உடலின் பல பகுதிகளை குத்தி கொடுமைப்படுத்தி, கடைசியில் அவள் கழுத்தை அறுத்துக் கொன்றான் என தெரியவந்தது. இதனையடுத்து முகமது ஆரிப் கைது செய்யப்பட்டான். இந்த லவ் ஜிஹாத் வழக்கை விரைவாக விசாரித்து அவனுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி ஹிமாச்சல் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் பஜ்ரங் தள் தலைவரான சஞ்சீவ் குமார், ‘இந்த வழக்கு குடியிருப்பாளர்களிடையே கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த ‘லவ் ஜிஹாத்’ அச்சுறுத்தல் தங்கள் வீட்டு வாசலையும் எட்டிபார்க்கிறது என்பதை மக்கள் தற்போது உணரத் துவங்கிவிட்டனர்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here