பன்னாட்டு நிதியம் அதன், உலக பொருளாதார பார்வை குறித்த நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் 8.2 சதவீதமாக இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட, இரண்டு மடங்கு வேகமானதாக இருக்கும்.உலக பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 3.6 சதவீதமாக இருக்கும். இது கடந்த 2021ல் 6.1 சதவீதமாக இருந்தது.இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 2021ல், வளர்ச்சி 8.9 சதவீதமாக இருந்தது. 2023ல் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும்.நடப்பு ஆண்டை பொறுத்தவரை, இதற்கு முந்தைய கணிப்பிலிருந்து 0.8 சதவீதம் குறைத்தே 8.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.உக்ரைனில் நடக்கும் போரின் பிரதிபலிப்பு காரணமாக, அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறைத்து கணிக்கப்பட்டு உள்ளது. போர் காரணமாக எரிபொருள், மற்றும் உணவு பொருட்கள் விலையில் பாதிப்பு ஏற்பட்டு, அது வளர்ச்சியை பாதிக்கும்.சீனாவில் கடந்த ஆண்டு வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் வளர்ச்சி 4.4 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு 5.1 சதவீதமாக இருக்கும்.நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சியானது.
உலகஅளவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைக் காணும்.கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் மீட்சி காணத் துவங்கிய நிலையில், போரால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.