☠️மாய வலையில் சிக்காதீர்.

0
172

வீதிக்கு நான்கு மதுபானக்கடைகள் 🥃. ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கவேண்டிய சாராயக்கடைகள் , ஊருக்குள்ளே .

முச்சந்திக்கு ஒரு மருத்துவர் . அதனை சுற்று வரிசை கட்டி மருந்துகடைகள் . புற்றீசல் போல பிரியாணி கடைகள் , நல்லிரவுவரை பரோட்டாகடைகள் .

வீதியெங்கும் பானிபூரி ஸ்டால்கள் அனைத்திலும் , கலப்பபடமாய் 🚫ரோஸ் பவுடர் , அஜினமோட்டோ அல்லது அப்பல சோடாப்பு . போதாதற்கு வீடுதோறும் இட்லி , தோசை மாவு பாக்கெட்டுகள் .

❌ குழந்தைகளின் நாவை கெடுக்கும் துரித உணவுகள்-fast foods , 👽 எதிர்கால இந்த தேசம் , ஐரோப்பிய நாடுகளை போல , குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையைவிட குழந்தையே பிறக்கா சூழ்நிலையை நோக்கி , நாகரிக சமூகம் பயணிக்குறது .

வாகனங்கள் வாங்க கடன் கிடைத்த காலம்போயி . குழந்தை பெற்றுக்கொள்ள கடன் வாங்கி , TEST TUBE BABY- EMI கட்டவேண்டிய காலம் வந்துவிட்டது .

முன்னர் மண்ணை மலடாக்க உயிர்கொல்லி உரங்கள் (chemical fertilizers) வந்தது 👹 இன்று மனிதனை மலடாக்க மேற்கண்ட அனைத்தும் வரிசைகட்டி நிற்கின்றன . 🚬

விழிப்போர் பிழைப்பர் .🌄 விழியாதோர் மாட்டிக்கொள்வர் , மாய வலையில் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here