பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்படுகிறது. இந்த கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது..
இந்த தற்கொலைபடை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 3 பேர் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் என மொத்தம் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் 30 வயதான ஷரி பலோச் என்ற பரம்ஷா அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பை சேர்ந்த பெண் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இதுவே முதல்முறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.