திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி கிராமத்தில், இந்துக்கள் 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷனரி சர்ச் உள்ளது.அந்த நிர்வாகத்தின் சார்பில், புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, யேசுபாதம், 45, என்ற பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் அங்குள்ள ஒரு பிரிவு மக்களை, மதம் மாற வலியுறுத்தி வந்துள்ளார்; அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில், ”100” ஆண்டுகளுக்கும் மேல் பொதுவழியாக பயன்படுத்தி வந்த இடத்தில் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்.இது குறித்து கிராம மக்கள், பஞ்., தலைவர் சிவக்குமார் ஆகியோர் சர்ச் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘அது எங்களுக்கு சொந்தமான இடம். அதனால் சுவர் எழுப்பியுள்ளோம்’ என, கூறியுள்ளனர்.சர்ச் நிர்வாகம் மற்றும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள், கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Home Breaking News கிறிஸ்துவ மதம் மாற கிராம மக்கள் எதிர்ப்பு : திருவண்ணாமலையில் கிருஸ்துவ மிஷனரி அராஜகம்