இன்னசெண்ட் நடத்தும் ஹோட்டலுக்கு Food இன்ஸ்பெக்டர் ரெய்டு நடத்தாமல் இருக்க
இன்ஸ்பெக்டருக்கு மதுவை வாங்கி கொடுத்து அதற்கு சைடிஷ்ஷாக அவர் ஹோட்டலில் சமைத்த பீப் கறியை கொடுத்து டேஸ்ட் எப்படி இருக்கு என்று கேட்க
இன்ஸ்பெக்டரோ அடடா அபாரம் அற்புதமான சுவை
இதுபோல் எங்குமே சாப்பிட்டதில்லை என்பார்
இன்னசெண்ட் அவரிடம்
ஆமாம்
இந்த ஹோட்டலில் இந்த பழைய இறைச்சிகள் விற்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்கிறார்.
ஏதாவது டெஸ்டிங் மிஷின் இருக்கா?!
இன்ஸ்பெக்டரோ
அதை சாப்பிட்டு பார்த்து தான் கண்டு பிடிப்பேன் என்கிறார்
இன்னசெண்ட் நல்லவேளை நீங்க யூரின் மோஷன் டெஸ்ட் பரிசோதிப்பவரா இல்லை
என்று சொல்லிவிட்டு இப்போ நீங்க சாப்பிடும் இந்த இறைச்சி எத்தனை நாள் பழக்கம் இருக்கும் என கேட்கிறார்
அதற்கு டேஸ்ட் வைச்சு பார்க்கும் போது இது இன்னைக்கு மதியம் தான் சமைச்சிருக்கனும் என்று சொல்ல
இன்னசெண்ட் தன் மகனை அழைத்து ஓங்கி ஒரு அப்பு அப்புகிறார்!
ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்க
இவன்கிட்ட பலவாட்டி சொல்லியிருக்கேன்
இறைச்சி நாளாக நாளாக டேஸ்ட் கூடும் என்று.
இவன்தான் இன்ஸ்பெக்ஷன் வந்து கண்டுபிடிச்சா மாட்டிக்கிவோம் என்று என்னை பயமுறுத்தினார்.
இத்தனை வருஷம் சர்வீஸில் உள்ள நீங்களே சொல்லீட்டிங்க “ஒரு வாரம்” ஆனா இந்த கறி டேஸ்டா இருக்குன்ன!
இதை ஏன் சொல்கிறேன் என்றால் தற்போது எங்கேனும் உணவுபாதுகாப்பு துறை ரெய்டு நடத்தி பார்த்தோ கேட்டோ இருக்கிறீர்களா?!.
நாளுக்கு நாள் உணவு கடைகள் கூடுதே தவிர
அந்த உணவுக்கூடங்களில் சோதனை நடத்தும் துறைகளுக்கு அதிகாரிகள் கூடி இருக்கிறார்களா?!
மக்களின் உயிர் மீது அரசாங்களின் அக்கரை லட்சணம் அந்த விதத்தில் இருக்கு!.