தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் சலீம் ப்ரூட் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்

0
231

கைது செய்யப்பட்ட 6 பேர் சலீம் ப்ரூட், கய்யூம், சாமி ஹிங்கோரா, குட்டு பதான், மொபினா பிவாண்டிவாலா மற்றும் அஸ்லம் பதானி என அடையாளம் காணப்பட்டதாக என்ஐஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மும்பை (மகாராஷ்டிரா): பாகிஸ்தானை சேர்ந்த கும்பல் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் மற்றும் சில ஹவாலா ஆபரேட்டர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக, மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சலீம் ப்ரூட் உட்பட 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேர் சலீம் ப்ரூட், கய்யூம், சாமி ஹிங்கோரா, குட்டு பதான், மொபினா பிவாண்டிவாலா மற்றும் அஸ்லம் பதானி என அடையாளம் காணப்பட்டதாக என்ஐஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மும்பை கமிஷனரேட்டில் 24 இடங்களிலும், மீரா ரோடு பயந்தர் கமிஷனரேட்டில் 5 இடங்களிலும் என்ஐஏ சோதனை நடத்தியது.

தாவூத் இப்ராகிம் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட டி-கம்பெனியின் சர்வதேச பயங்கரவாத நெட்வொர்க்கின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்காகும். அவர்கள் ஆயுதக் கடத்தல், போதைப்பொருள்-பயங்கரவாதம், பணமோசடி, FICN புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாததிற்கு நிதி திரட்டுதல் முக்கிய சொத்துக்களை அபகரித்து வைத்திருப்பது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் அல் கொய்தா (AQ உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

சோதனையின் போது, ​​மின்னணு சாதனங்கள், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள்,  பெரும் பணம், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை தொடர்கிறது. (ANI

 

                                                                                            தமிழில்: சகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here