வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல முறை கொடூரத் தாக்குதல்களுக்கும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள், அங்கு மேலும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதற்கு அவர்கள் அடிக்கடி ஒரு விஷயம், குரானின் நகலை யாருக்கும் தெரியாமல் ஒரு ஹிந்து கோயிலில் வைத்துவிட்டு பிறகு, ஹிந்துக்கள் குரானை அவமதிப்பதாக குற்றம் சாட்டுவதாகும். அவ்வகையில், கடந்த மாதத்தில் மட்டும் வங்கதேசத்தில் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொமிலா மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர் பத்ஷாலாவில் ஏப்ரல் 17 அன்றும், ஏப்ரல் 28ல், பதுகாலி மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோயிலிலும் இருவேறு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் குரான் பிரதியை வைக்க முயன்ற இரண்டு முஸ்லிம்களை பக்தர்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த இருவேறு சம்பவங்களிலும் ஹிந்துக்கள் சற்று எச்சரிக்கையாக இருந்ததால் அவர்கள் மீதான இரண்டு கொடூரத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டன. இதுகுறித்த சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடாமல் தவிர்த்துவிட்டன.