வெளிப்படுத்திக்கொண்ட சிவன்

0
477

விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வின் போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தைக் கண்டறிவது அங்கு கோயில் இருப்பதைத் தானே வெளிப்படுத்துகிறது? எனவே சிவலிங்கம் இருக்கும் இடம் 1947ல் இருந்து இன்னும் கோயிலாகவே உள்ளது. அது தன்னை நிரூபித்துக்கொண்டுள்ளது. இத்தகைய சான்றுகள் கிடைத்துள்ளதால் இப்போது நாட்டின் அனைத்து மக்களும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். அதை மதித்து, நாடு அதன் இயற்கையான விளைவுகளை நோக்கி நகரும் என்று நான் நம்புகிறேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளதால் அந்த பகுதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு முறைகேடு நடக்காமல் பார்த்துக்கொள்வது காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பு. இந்த பிரச்சினை ஒரு முடிவை எட்டும் என்று நம்புகிறோம். ஏனெனில் இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கு மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, நாங்கள் அதைப் பற்றி மேலும் யோசிப்போம். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை வி.ஹெச்.பி முடிவு செய்ய முடியும்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, “நீங்கள் எவ்வளவு உண்மையை மறைத்தாலும் ஒரு நாள் அது வெளிவந்தே தீரும். ஏனென்றால் சிவன் என்றால் உண்மை. பாபா கி ஜெய், ஹர் ஹர் மகாதேவ்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here