76 மதிப்பெண் பெற்றவருக்கு 6 வழங்கி அலட்சியம் : தமிழக பள்ளிக்கல்வித் துறை என்ன செய்கிறது ?

0
186

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தத்தில், அதிக அளவுக்கு கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், நன்றாக தயாராகி தேர்வு எழுதியும், சரியான மதிப்பெண் கிடைக்காததால், பல மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். விடைத்தாள் நகல் கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.
விடைத்தாள் வழங்கப்பட்டது இதை ஆய்வு செய்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.பலரின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டபோதும், மதிப்பெண்களை சரியான முறையில் கூட்டி பதிவிடாதது தெரியவந்துள்ளது.
சில மாணவர்களுக்கு 70க்கும் மேல் மதிப்பெண்கள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. கூட்டல் பிழையால், பல மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் கூட பெற முடியாத அளவுக்கு, தேர்வு முடிவு வந்துள்ளது.
ஒரு மாணவர் விடைத்தாளில் 76 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவருக்கு 6 மதிப்பெண் மட்டும், விடைத்தாள் முகப்பில் பதிவு செய்துள்ளது தெரியவந்து உள்ளது.அரசு தேர்வுத் துறை நடத்திய விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த கூட்டல் பிழை, மாணவ – மாணவியர் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சந்தேகம் ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்க இன்னும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here