போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, போபால் நர்மதாபுரம் ரயில் பாதையில் இருந்து இளம் பி.டெக் மாணவர் நிஷாங்க் ரத்தோர் சடலமாக மீட்கப்பட்டார். ரத்தோர் போபாலில் உள்ள ஓரியண்டல் கல்லூரியில் ஐந்தாம் செமஸ்டர் பி.டெக் படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் நிஷாங்கின் குடும்பத்தினர் அவரைத் தேடிக்கொண்டிருந்தனர், அதே நேரத்தில் நிஷாங்க்கின் குடும்பத்தினரும் நண்பர்களும் நிஷாங்கின் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய சில இடுகைகளைப் பார்த்தனர். இந்த இடுகைகளில் நிஷாங்கின் படமும், “குஸ்தாக் இ நபி கி இக் சசா, சர் தான் சே ஜூடா” (நபிக்கு எதிரான நிந்தனைக்கு ஒரே ஒரு தண்டனை, உடலில் இருந்து தலை துண்டிக்கப்படுவது மட்டுமே) என்ற வாசகம் இருந்தது. பின்னர், மாலை 6 மணியளவில் நிஷாங்கின் தந்தைக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதில், ‘ரத்தோர், உங்கள் மகன் மிகவும் தைரியமானவர். நபியை நிந்தித்ததற்காக ஒரே ஒரு தண்டனை, உடலில் இருந்து தலையை துண்டிப்பது மட்டுமே’ என இருந்தது. இதைத் தொடர்ந்து, ராத்தோர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து நடைபெற்ற தேடலில், ரயில் பாதையில் நிஷாங்கின் உடலை கண்டுபிடித்த காவல்துறையினர் ரத்தோரின் உடல் அருகே அவரது ஸ்கூட்டி மற்றும் மொபைல் போனையும் கண்டுபிடித்தனர். நிஷாங்கின் தந்தை, தனது மகன் ஒரு சுதந்திர மனப்பான்மை கொண்டவர், அவர் ஒருபோதும் அவர் தற்கொலை செய்திருக்க முடியாது, முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.