என்.ஐ.ஏ சோதனை

0
180

பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்த வழக்கில் சிக்கியவர்களில் சிலர் தீவிர முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் (பி.எப்.ஐ) தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்ததையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) நேற்று பீகாரில் நாளந்தா மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ள ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் நடத்தப்படும் இடங்கள் அனைத்தும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) உடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. செய்தி ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, இதுவரை பலர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது. முன்னதாக, புல்வாரி ஷெரீப் வழக்கில் பீகார் காவல்துறை 5 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 26 குற்றவாளிகள் பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் பாட்னா வருகைக்கு 15 நாட்களுக்கு முன்பு இந்த பயங்கரவாதிகளுக்கு புல்வாரி ஷெரீப் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் ஜூலை 6, 7 தேதிகளில் கூட்டங்களை நடத்தி, வகுப்புவாதத்தைத் தூண்டும் பேச்சுகளைப் பரப்பினர். முன்னதாக, தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் இதேபோன்ற கைதுகள் செய்யப்பட்டன. அங்கும் பி.எப்.ஐ அமைப்பினர், இதேபோன்ற முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். அமலாக்க இயக்குநரகமும் இந்த வழக்கில் பி.எப்.ஐக்கு எதிராக பணமோசடி வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here