அசிங்கப்பட்ட சீனா!தைவான் விஷயத்தில் டோட்டலா இமேஜ் டேமேஜ் ஆகி அசிங்கப்பட்ட சீனாவும், விளையாடிய அமெரிக்காவும்!
அமெரிக்காவின் நான்ஸி பெலோஸி, சபாநாயகர், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு அடுத்து மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். அவர் இன்று மட்டுமல்ல, தியான்மென் சதுக்கத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனம் முதல், ஹாங்காங்கில் பிரச்சின்னை வெடித்த போது அங்கு சென்றது வரை தீவிர சீன எதிர்ப்பை கொள்கையாக்கியவ்ர். அப்படிப்பட்ட் அவர் தைவான் செல்வதாக அறிவித்தார்.அதற்கு சீனா, தைவான் என்னுடைய தீவு, அங்கே வந்தீன்னா உன்னுடைய விமானத்தை குருவி சுடுர மாதிரி சுட்டு தள்ளிடுவேன் என்று கொக்கரித்தது.
மேலும் இதுவரை வெளியே காட்டாத தன்னுடைய சூப்பர் சானிக் ஏவுகணையான DF 17, விமான படையில் Mighty Dragan என்ற J20, விமானந்தாங்கி கப்பல் என்று தென் சீனக்கடலில் தைவானை சுற்றி நிறுத்தியது.
அது மட்டுமல்ல தனது முப்படைகளை அருகில் செலுத்தி மிலிட்டர் எக்ஸர்சைஸ் எல்லாம் செய்து பாவ்லா காட்டு பயமுறுத்தியது. அது காட்டிய ஆக்ரோஷத்தை பார்த்தால் கைப்புள்ள இந்த முறை என்ன செய்ய போறானோ என்ற அளவில் அதன் பில்டப் இருந்தது.
ஒரு நிலையில் அமெரிக்கா பின் வாங்கும் ஒரு நிலை கூட ஏற்பட்டது.
ஆனால் முன்னால் ஜனாதிபதி ரொனால்ட் டரம்ப், அமெரிக்கா இப்போது இதை செய்தே ஆகவேண்டும், பின் வாங்க கூடாது என்று ஆதரவும், அதிபருக்கு நெருக்கடியும் கொடுத்தார்.
இருந்தாலும் சிறு தயக்கம் காட்டிய அமெரிக்கா, இதில் பின் வாங்கினால் ஏற்கனவே உக்ரைன்ல ரஷ்யாவால் டேமேஜ் ஆன இமேஜ், மேலும் தவிடு பொடி ஆகி விடும் என்று நான்ஸியின் சிங்கப்பூர், மலேசியா பயணத்தை முடித்து கொண்டு தென் சீனக்கடலை தவிர்த்து விட்டு, பிலிப்பன்ஸ் வழியாக அமெரிக்க ஏர்போர்ஸுக்கு சொந்தமான பாதுகாப்பான விமானத்தில் தைவான் நேற்றிரவு சென்று சேர்ந்துள்ளார்.
அவரது விமானத்தின் பயணத்தை உலகம் முழுதும் ஆன்லைன் ஃப்ளைட் ட்ராக்கிங் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பார்த்து கொண்டு இருந்தனர் என்றால் அதன் பதட்டம் உங்களுக்கு புரியும்.
மேலும் நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று சீன நவீன ரக விமானம் தைவான் வான் எல்லையில் நுழைய, தைவான் வார்னிங் ஃபயர் கொடுத்தது. டுபாக்கூர் சீனா, வழக்கம் போல வீதிக்கு வந்துட்டயா, என் வீட்டுக்கு வந்து பார் என்ற வடிவேலு தொனியில் பேசி எஸ்கேப் ஆகி அசிங்கப்பட்டது.
ஏன் சீனாவல் இதை செய்ய முடியவில்லை?
ஏற்கனவே இந்திய எல்லையில் ராணுவ வீரர்களோடு முஷ்டி காட்டிய சீனா, வாங்கிய அடிதான் அதன் வேஷம் கலைந்த முதல் அடியால் அதன் உதார் உலகறிந்தது.
காரணம் அதன் மிகச்சிறந்த ஆயுதங்கள், அதன் மிகப்பெரிய ராணுவம் என்று என்று சொல்லப்படும் எதுவுமே போர்களின் மூலம் சோதிக்கப்பட்டதல்ல.
மேலும் சீனாவின் ராணுவம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் ரவுடிகளை விட கொஞ்சம் மேலானதுஅவ்வளவுதான். அதனால் தான், நமது இந்திய ராணுவ வீரர்கள் வெறும் 80+ பேர், 340+ சீன ராணுவத்தை அடித்து துவம்சம் செய்தனர்.
சீனாவின் சோப்லாங்கி டெக்னாலஜி என்பது எவ்வளவு டுபாக்கூர் என்றால், அதன் வான் பாதுக்காப்பு கவசம், சூப்பர் சோனிக் ஏவகணையைக்கூட சுட்டுத்தள்ளும் திறமை வாய்ந்தது என்று சென்ற வருடம் வரை கூவி வந்தது.
அதனால் நமது பிரம்மோஸ் ஏவுக்னையை வாங்க சீனாவின் எதிரிகள் தயக்கம் காட்டினர்.
ஆனால் இந்தியா பாகிஸ்தானில், சீன வான்காப்பில் உள்ள அதன் எல்லையை மீறி 148 கிமீ பறந்து சென்று விழுந்தது நியாபகம் இருக்கிறதா? அதன் வான் பாதுகாப்பு ஒரு தீபாவளி புஷ்வானம் ஆகி அப்போதே அசிங்கப்பட்டது.
அது ஏதோ இந்தியாவால் தவறுதலாக நடந்து விட்டது என்று சொன்னாலும், அது திட்டமிட்ட இந்தியாவால் செயல்படுத்திய சோதனைதான். அதை அமெரிக்காவும் நன்கு அறியும்! அதன் பின்பு பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கியது.
அது மட்டுமல்ல நமது Su 27 மிக் போர் விமானம் ஒவ்வொரு மாதமும் பாகிஸ்தானில் மட்டுமல்ல, சீனாவிலும் நுழைந்து திரும்பியுள்ளது.
அடுத்து சீனாவிற்கு உண்மையான நண்பர்களே இல்லை. இப்போதைக்கு நண்பர் என்று சொல்லும் ரஷ்யா அமெரிக்க எதிர்ப்புக்காக சீனாவுன் கை கோர்க்கிறது அவ்வளவுதான்
ஏற்கனவே உகரைன் போரில் இருக்கும் ரஷ்யாவால் சீனாவிற்கு உதவ முடியுமா?
முடியாது. இந்தியாவை மீறி ரஷ்யா எதுவும் செய்யாது. ஏனெனில் சீனா சரியான நட்பு நாடு கிடையாது
அதுவும் இந்தியா முதல் உலகமே எதிர்க்கும் சீனாவை காப்பாற்ற சென்றால், அதற்கு இப்போது பொருளாதார ரீதியில் ஆதரவு தரும் இந்தியா தொடர்ந்து செய்யுமா?
வட கொரியா வந்தால், அதை கவுண்டர் செய்ய தென்கொரியா உடனே அதை தாக்கும். ஆனால் சீனாவை சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் அதன் மிக மோசமான ஆறாத பகை கொண்ட நாடுகளே.
அப்படி இருக்க, சீனா, தைவானை தாக்கினால் அதன் முழு படைகளை கிழக்கு எல்லைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கிழக்கில் அதன் போர் உச்சத்தை அடையும் பட்சத்தில், சீனாவின் சோதிக்கப்படாத பல தளவாடங்களின் உண்மை நிலையை உலகம் அறியும்.
அப்படி படைகளை சீனா கிழக்கு நோக்கி கொண்டு சென்றால், இந்தியா அதற்காகத்தான் மேற்கில் காத்திருக்கிறது.
அப்போது, 1962 ஆண்டு யுத்தத்தில் மாமா நேருவால் இழந்த கிழக்கு லடாக்கில் இந்திய படைகள் நுழைந்து அதை கைப்பற்றும்.
சீனா ஆக்கிரமித்துள்ள தீவுகளை ஜப்பான் கைப்பற்றும். சீனாவின் கரங்கள் தாளும் நிலையில் வியட்நாம், மங்கோலியா போன்ற 13 நாடுகளின் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தனது நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றும்.
இப்படி பல எதிரிக இருந்தாலும், நேரடியாக களத்தில் இறங்கி அடிக்கும் இந்தியா என்ற ஒரு காரணத்தால் தான் அமெரிக்கா, இந்தியாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது.
அதனால்தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், பொருளாதர தடையெல்லாம் போடவில்லை. ஆம் சீனாவை நேரடியாக எதிர் கொள்ள இந்தியாவை தவிர வேறு எந்த நாடுகளும் இல்லை என்ற பட்சத்தில், ஒரு வேளை சீனா நாளை தைவானை தாக்கினால், அதை ஒடுக்க இந்தியாவின் தயவு மிக அத்யாவசியம்.
அது மட்டுமல்ல அருகில் இருக்கும். ஒரு நாட்டின் மிலிட்டரியால் மட்டுமே சீனாவின் எல்லையில் உடனே எளிதாக நுழைய முடியும். இல்லாவிட்டால் தனது படைகளை அமெரிக்காவில் இருந்து சீனாவை நோக்கி நகர்த்துவது என்பது அசாதாரணம்.
இன்னும் சொல்ல போனால், ஜப்பான் ஒரு சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும், இந்தியாவை போல அதனால் சீனாவை தாக்க முடியாது.
அதே வேளையில், சீனாவின் வீழ்ச்சி தொடங்கினால், திபெத் சுதந்திரத்தை அறிவிக்கும், ஜின்ஷியாங் போன்ற பல பகுதிகளில் இருக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் மாறி பெரும் உள் நாட்டு கலவரம் வெடிக்கும். சீனா உடைந்து சின்னாபின்னமாகும்.
அதனால சீனாவோ தனது விமானந்தாங்கி கப்பலை தைவானை நோக்கி நிறுத்தி விட்டு, அதன் வான் எல்லையில் நுழைந்து வெறும் உதார் காட்டியுள்ளது.
அங்கே ஏற்கனவே அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் அங்கே நிற்பதால், அதற்கு மேல் ஒன்றும் செய்து விட முடியவில்லை.
என்ன செய்வது, விவசாய மற்றும் கடல் சார்ந்த பொருட்களை தைவானிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு தடை செய்துள்ளது. அதாவது தன் நாட்டின் பகுதி என்று சொல்லும் சீனா, அதன் பகுதியையே தடை செய்யும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
வடிவேலு ஸ்டைலில் என் வீட்டுக்கு வந்து பார் என்றளவில் பின்வாங்கியதால், இப்போதைக்கு சீனா இமேஜ் டோட்டலி டேமேஜ்,
அடுத்து என்ன நடக்கும் என்று உலகமே பார்த்து கொண்டு இருக்கிறது. இத்தோடு விட்டுவிட்டால் முடிந்து விடுமா என்றால், தேவையில்லாமல் அமெரிக்காவை சீண்டி அசிங்கப்பட்டதற்காக, சீன அதிபருக்கு உள் நாட்டிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் எதிர்ப்பு பலமாகும்.
இதெற்கெல்லாம் காரணம் அதன் பொருளாதாரமே என்ற சூழலில் அதன் வாணிபம் ஏற்கனவே உலக நாடுகள் புறக்கணிக்க தொடங்கியதால் சரிய தொடங்கிவிட்ட சூழலில், மேலும் அதிக அளவில் பாதிக்கும், அது கோவிட்டிற்கு பின்பு தொடங்கி விட்ட சரிவை சந்தித்து வரும் வேளையில், சீனாவின் சரிவு மேலும் எல்லா மார்க்கங்களிலும் தவிர்க்க முடியாதது.
இது உலகின் புதிய சமன்பாட்டை செய்யப்போகும் முக்கியமான கட்டம் என்பதால் நான்ஸி போன விமானத்தை உலகம் .முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
இப்போதைய சூழலில் அமெரிக்காவின் கரங்கள் உயர்ந்துள்ளது. ஆனால் அதன் மூலம் மறைமுகமாக பயன்பெற போவது இந்தியாவின் ராஜ தந்திரமே
சுவாராசியமான கட்டத்தில் இப்போது சீனாவும், அமெரிக்காவும்.. அடுத்து என்ன நடக்கப்போகிறது? உலகமே. கூர்ந்து கவனிக்கிறது, நாமும் கவனிப்போம்!
நன்றி
தேசபக்தர்கள்